Sunday, December 14, 2008

கிழக்குச் சீமையிலே....




என்ன கொடும சார் இது!?




காலையில் பார்த்தால் எல்லா வண்டியும் அந்த பக்கம் இருந்து வந்தது. இப்போ எல்லா வண்டியும் இங்கிருந்து அப்பக்கமா போகுது!!! அலுவல் முடிந்து ரோட்டில் வந்து நின்று இப்படிதான் புலம்பினேன்.




‘அழுக்கு நகரம்’ என்றழைக்கப்படும் கொல்கதாவில் தான் இந்த விநோதம். அங்கு காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஒரு திசை நோக்கியும், மதியம் ஒரு மணி முதல் காலை ஏழு வரை அதன் எதிர் திசையிலும் ட்ராஃபிக் இருக்கும். அலுவலகம் செல்ல ஏதுவாக இப்படி ஒரு ஏற்பாடு என்று என் அலுவல் கார் ஓட்டுனர் கூறினார். யோசித்து பார்த்தால் நன்றாகத்தான் இருக்கு.

********************************************************************************

நீங்க இவ்ளோ நல்லவங்களா!!!!!!!
ஒருவரை பார்த்து இப்படி சொன்னா பரவால்ல, ஒரு ஊரையே இப்படி சொல்ல தோன்றினால்????

சிக்னலில் சிகப்பு விளக்கு எரியத் தொடங்கியது தான் தாமதம். நான் சென்று கொண்டிருந்து டாக்சி டிரைவர் இன்ஜினை ஆஃப் செய்து விட்டார். இவர் ரொம்ப நல்லவர் டீசலை மிச்சப்படுததறார்னு பார்த்தா ரோட்டில் இருந்த எல்லா வண்டியும் அப்படியே செய்தனர். நான் சென்ற டாக்சி நின்ற அனைத்து சிக்னலிலும் இதே கொடுமைதான்!
********************************************************************************
’இது மட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’ என்று கேட்பது போல அப்படி சிக்னலில் நிறுத்திய எவருமே சிக்னல் விழும் வரை வெள்ளை கோட்டை தாண்டவில்லை. அது இரு சக்கர வாகனமே ஆயினும். அப்படி ஒரு டிராஃபிக் ஒழுங்கு.

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல டூ-வீலரில் பயணம் செய்த அனைவருமே ஹெல்மெட் போட்டிருந்த்னர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் உட்பட. (யாரும் எனக்கு வயசாடுச்சி என்றோ, நான் பவர் கண்ணாடி போட்டிருக்கேன் என்றோ, எனக்கு தலை வலிக்கும் என்றோ, இத்யாதி.. இத்யாதி... காரணங்கள் சொல்ல மாட்டார் போலும்..)