Sunday, December 21, 2008

மறைந்துப் போகலாம்.....

The Day the Earth Stood Still சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஆங்கில திரைப்படம். கதை இதுதான் – மனிதன் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பூமியை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அழித்தும், உருமாற்றியும் வருகிறான். இதே பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றி அக்கறை படுவதாய் இல்லை. வெகு தொலைவில் வாழும் வேறு உயிரினம் அதனை ஒழுங்குப்படுத்த வருகிறது (எங்கு எது நடந்தாலும் தன் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவைப் போல). மனிதனை தவிர மற்ற உயிரினங்களில் சாம்பிள் எடுத்து பத்திரபடுததவும் செய்கிறது.

மனிதனை அழிக்க ஒரே ஒரு உயிர் தான் வருகிறது. அதன் பலம் அறியாமல் வழக்கம் போல நம் அமெரிக்கா தன் இரானுவ பலத்தை காட்டுகிறது. ஆனால் அதனிடம் அன்பு காட்டி அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் பெண் ஆராய்ச்சியாளர், மனித இனத்தை அழிக்க வேண்டாம் என்றும் மனிதன் தன்னை திருத்திக் கொள்வான் என்றும் புரிய வைக்கிறார். மனிதனை நம்பும் அந்த (முட்டாள்!!!) வேற்று கிரக உயிரினமும் மனிதனை அழிக்காமல் சென்று விடுகிறது.

(நான் படத்தினை விமர்சிக்க முயலவில்லை. மாறாக அதன் கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.)

படத்தை பார்க்கும் பொழுதே யோசித்துப் பார்த்தேன்.

மற்ற உரினங்களுக்கு சிந்திக்கும் அறிவு இல்லாததால் தானே நாம் அதனை அடிமைகளாக்கி ஆட்சி செய்கிறோம். ஒரு வேளை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அவை அனைத்தும் சிந்திக்கும் திறன் பெற்று நாம் அவைகளுக்கு செய்யும் கொடுமையை உணர்ந்துக் கொண்டால்!!??

நாம் அவ்வுயிரினங்களுக்கு எதிரிகள் என்றும் நாம் வாழ அவைகளை அழித்தும், பயன்படுத்தியும் வருகிறோம் என்று எண்ணத் தொடங்கி நம்மை அழிக்க அவைகள் புறப்பட்டால், என் ஒருவனை அழிக்க மட்டும் பல லட்சம் உயிர்கள் ரவுண்டு கட்டி நிற்கும். நினைத்துப் பார்க்கலாம் என்றால் அந்நினைப்பை முடிக்கும் முன்பே நான் இருந்த தடயம் இல்லாமல் ஆகி விடுவேன் போலும்….

 

இப்பூமியில் நம்மை விட ஆற்றல் மிகுந்த உயிரினங்கள் பல உள்ளன. அவர்கள் நம்மை ஆள வெகு காலம் ஆகாது. இப்பூமி நமக்கு மட்டும் சொந்தம் இல்லை. நமக்கு முன்பும், இப்பொழுதும், எதிர்காலத்தில் ஜனிக்கப்போகும் பல கோடானு கோடி உயிர்களுக்கும் சொந்தம்.

யாரும் யாரையும் அழிக்கும் முன்பு உணர்ந்து செயல்படுதல் நலம்…. இல்லையேல் சிந்திக்க கூட நேரம் இன்றி மறைந்துப் போகலாம்.

 

 

Sunday, December 14, 2008

கிழக்குச் சீமையிலே....




என்ன கொடும சார் இது!?




காலையில் பார்த்தால் எல்லா வண்டியும் அந்த பக்கம் இருந்து வந்தது. இப்போ எல்லா வண்டியும் இங்கிருந்து அப்பக்கமா போகுது!!! அலுவல் முடிந்து ரோட்டில் வந்து நின்று இப்படிதான் புலம்பினேன்.




‘அழுக்கு நகரம்’ என்றழைக்கப்படும் கொல்கதாவில் தான் இந்த விநோதம். அங்கு காலை ஏழு மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஒரு திசை நோக்கியும், மதியம் ஒரு மணி முதல் காலை ஏழு வரை அதன் எதிர் திசையிலும் ட்ராஃபிக் இருக்கும். அலுவலகம் செல்ல ஏதுவாக இப்படி ஒரு ஏற்பாடு என்று என் அலுவல் கார் ஓட்டுனர் கூறினார். யோசித்து பார்த்தால் நன்றாகத்தான் இருக்கு.

********************************************************************************

நீங்க இவ்ளோ நல்லவங்களா!!!!!!!
ஒருவரை பார்த்து இப்படி சொன்னா பரவால்ல, ஒரு ஊரையே இப்படி சொல்ல தோன்றினால்????

சிக்னலில் சிகப்பு விளக்கு எரியத் தொடங்கியது தான் தாமதம். நான் சென்று கொண்டிருந்து டாக்சி டிரைவர் இன்ஜினை ஆஃப் செய்து விட்டார். இவர் ரொம்ப நல்லவர் டீசலை மிச்சப்படுததறார்னு பார்த்தா ரோட்டில் இருந்த எல்லா வண்டியும் அப்படியே செய்தனர். நான் சென்ற டாக்சி நின்ற அனைத்து சிக்னலிலும் இதே கொடுமைதான்!
********************************************************************************
’இது மட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’ என்று கேட்பது போல அப்படி சிக்னலில் நிறுத்திய எவருமே சிக்னல் விழும் வரை வெள்ளை கோட்டை தாண்டவில்லை. அது இரு சக்கர வாகனமே ஆயினும். அப்படி ஒரு டிராஃபிக் ஒழுங்கு.

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல டூ-வீலரில் பயணம் செய்த அனைவருமே ஹெல்மெட் போட்டிருந்த்னர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் உட்பட. (யாரும் எனக்கு வயசாடுச்சி என்றோ, நான் பவர் கண்ணாடி போட்டிருக்கேன் என்றோ, எனக்கு தலை வலிக்கும் என்றோ, இத்யாதி.. இத்யாதி... காரணங்கள் சொல்ல மாட்டார் போலும்..)

Saturday, December 13, 2008

அவர்களா இவர்கள்....

நண்பன் கூறியது என் நினைவில் இருந்தது. ‘ட்ரெயினில் பார்த்து செல், கூட்டத்தில் உனனை நசுக்கி விடுவர்’.

அன்று ஞாயிறு காலை ஒன்பது மணி... ஆட்டோவில் இருந்து இறங்கி அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததுமே தலை சுற்றியது. நிச்சயம் செல்ல வேண்டுமா? திரும்பி சென்று டிவி பார்க்கலாமா என்று யோசித்தேன்.. வேண்டாம், இவ்வளவு தூரம் வந்து விட்டு குறைந்த பட்சம் ‘கேட் வே ஆஃப் இண்டியா’ பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது.

நம் ஊரில் திங்கள் காலையில் இருக்கும் கூட்டத்தை விட அந்த வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருபது நிமிடம் வரிசையில் நின்று சீட்டை வாங்கிய பின் பிளாட்பாரம் சென்று நின்றேன். ட்ரெயின் வந்து நின்றதுதான் தாமதம், நம் ஊர் சினிமா தியேட்டரில் முட்டி மோதி டிக்கெட் வாங்கி உள்ளே செல்வோமே அது போலத்தான் அம்மக்களும் என்னை தள்ளி விட்டு இறங்கி சென்றனர். இதை விட கொடுமை அவர்களுக்கு வழி விடாமல் வழியை மறித்து நின்றவர்கள் இறங்குபவர்களை மீறி ஏறியது....

பயணத்தை தொடங்கி இறங்கும் நிலையம் வந்தது... என்னை சுற்றி பத்து நபர்களேனும் இருப்பர். வண்டி நின்றது... ஏதோ பிரளயம் ஏற்பட்டு அனைவரும் பதறி ஓடுவது போல என்னையும் பத்திரமாக வெளியே தள்ளி விட்டு நொடியில் மறைந்து விட்டனர். நான் இயல்பு நிலைக்கு வரும் முன்பே அந்த ட்ரெய்ன் நகர்ந்து சென்றது. இப்படியுமா மக்கள் இருப்பர்... அக்கூட்டத்தில் குறைந்த பட்சம் ஆறு மாநில் மக்களை கண்டேன். (உபயம்: அவர்கள் அனிந்திருந்த உடை).

***************************************************

டாக்சியில் சென்று கொண்டிருந்தேன்... பத்து கி.மீ பயணம். நான் காண்பது நிஜமா இல்லை கணவா என்று புரியவில்லை. எந்த மக்களை பார்த்து மாக்கள் என்று உள்ளுக்குள் திட்டினேனோ அம்மக்கள் வரிசையில் நின்று பஸ் ஏறுவதை பார்த்து நம்ப முடியாமல் விழித்தேன்....

ஆம் அவ்வாறு வரிசையில் நின்று பஸ் ஏறுவது அங்கு வழக்கமாம். நண்பன் மொபைலில் கூறியபொழுது சற்று தலை சுற்றத்தான் செய்தது... நம் மாநிலத்தில் ஏன் இப்பழக்கம் இல்லை.

’எவ்வளவோ செஞ்சிட்டோம் இத செய்ய மாட்டோமா!!!’

வெறும் டயலாக்காவே போய் விடுமோ??????

Wednesday, December 3, 2008

என் முதல் அநுபவம்...... ( ரூ.9 )

ஆட்டோவில் இருந்து இறங்கி meterஅ பார்த்து விட்டு, பழக்க தோசத்தில் ஒட்டுனரை பார்த்து எவ்வளவு என்றேன். அவர் மீட்டரை பார்த்து விட்டு ரூ.9 என்றார்(அவர் மொழியில்). என் இதயமே ஒரு நொடி நின்று இயங்கியது. என் சிறு வயது முதல் இன்று வரையில் பத்து ரூபாய்க்கும் குறைவாக பயனம் செய்த வரலாறு இல்லை.

பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து கொடுத்து விட்டு நடக்கலானேன். அந்த ஓட்டுநர் என்னை அழைத்து ஒரு ரூபாய் நாணயத்தை திருப்பி கொடுத்து விட்டு சென்று விட்டார். நான் உன்மையிலேயே பிரம்மையில் ஆழ்ந்தேன்.

இவை அனனத்தும் பால் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் நடமாடும் ’புந்நிய’ பூமியில் நிகழ்ந்த அதிசயம். நான் வாழும் நாட்டின் ஒரு பகுதியில் இப்படியும் மக்களா? இப்படியும் ஒரு வழக்கமா?

குறிப்பு: நான் முதல் முறையாக(22/11/08) மும்பை சென்ற பொழுது நடந்தவை இவை.