Saturday, December 13, 2008

அவர்களா இவர்கள்....

நண்பன் கூறியது என் நினைவில் இருந்தது. ‘ட்ரெயினில் பார்த்து செல், கூட்டத்தில் உனனை நசுக்கி விடுவர்’.

அன்று ஞாயிறு காலை ஒன்பது மணி... ஆட்டோவில் இருந்து இறங்கி அங்கிருந்த கூட்டத்தை பார்த்ததுமே தலை சுற்றியது. நிச்சயம் செல்ல வேண்டுமா? திரும்பி சென்று டிவி பார்க்கலாமா என்று யோசித்தேன்.. வேண்டாம், இவ்வளவு தூரம் வந்து விட்டு குறைந்த பட்சம் ‘கேட் வே ஆஃப் இண்டியா’ பார்த்தாக வேண்டும் என்று தோன்றியது.

நம் ஊரில் திங்கள் காலையில் இருக்கும் கூட்டத்தை விட அந்த வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருபது நிமிடம் வரிசையில் நின்று சீட்டை வாங்கிய பின் பிளாட்பாரம் சென்று நின்றேன். ட்ரெயின் வந்து நின்றதுதான் தாமதம், நம் ஊர் சினிமா தியேட்டரில் முட்டி மோதி டிக்கெட் வாங்கி உள்ளே செல்வோமே அது போலத்தான் அம்மக்களும் என்னை தள்ளி விட்டு இறங்கி சென்றனர். இதை விட கொடுமை அவர்களுக்கு வழி விடாமல் வழியை மறித்து நின்றவர்கள் இறங்குபவர்களை மீறி ஏறியது....

பயணத்தை தொடங்கி இறங்கும் நிலையம் வந்தது... என்னை சுற்றி பத்து நபர்களேனும் இருப்பர். வண்டி நின்றது... ஏதோ பிரளயம் ஏற்பட்டு அனைவரும் பதறி ஓடுவது போல என்னையும் பத்திரமாக வெளியே தள்ளி விட்டு நொடியில் மறைந்து விட்டனர். நான் இயல்பு நிலைக்கு வரும் முன்பே அந்த ட்ரெய்ன் நகர்ந்து சென்றது. இப்படியுமா மக்கள் இருப்பர்... அக்கூட்டத்தில் குறைந்த பட்சம் ஆறு மாநில் மக்களை கண்டேன். (உபயம்: அவர்கள் அனிந்திருந்த உடை).

***************************************************

டாக்சியில் சென்று கொண்டிருந்தேன்... பத்து கி.மீ பயணம். நான் காண்பது நிஜமா இல்லை கணவா என்று புரியவில்லை. எந்த மக்களை பார்த்து மாக்கள் என்று உள்ளுக்குள் திட்டினேனோ அம்மக்கள் வரிசையில் நின்று பஸ் ஏறுவதை பார்த்து நம்ப முடியாமல் விழித்தேன்....

ஆம் அவ்வாறு வரிசையில் நின்று பஸ் ஏறுவது அங்கு வழக்கமாம். நண்பன் மொபைலில் கூறியபொழுது சற்று தலை சுற்றத்தான் செய்தது... நம் மாநிலத்தில் ஏன் இப்பழக்கம் இல்லை.

’எவ்வளவோ செஞ்சிட்டோம் இத செய்ய மாட்டோமா!!!’

வெறும் டயலாக்காவே போய் விடுமோ??????

No comments: